தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி கிராமத்தில் கடந்த 02.07.2020 அன்று சோமசுந்தரம் என்பவர் வீட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய தொட்டிக்குள் இறங்கிய போது விஷவாயு தாக்கி 4 நபர்கள் இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்முலம் பாதாள சாக்கடை சுத்தம் செய்வதன் மூலம் ஏற்படும் மரணங்களை தடுக்க ஆதித்தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கபட்டது
மேலும் அம்மனுவில் கூறியதாவது, தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டு கணக்கில் தூர்ந்து போன பக்கிள் ஓடையை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் போராட்டத்திற்கு பின்பு அச்செயல் தடுக்கப்பட்டது. மேலும் ‘Mass Cleaning” என்ற பெயரில் மாநகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் மாதம் இருமுறை சாக்கடை வாறுகாலுக்குள் துப்புரவு பணியாளர்கள் இறக்கி விடப்பட்டு சுத்தம் செய்ய பணிக்கப்படுகின்றன. மேலும் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யவும் மனிதர்கள் இறக்கி விடப்படுகின்றனர். இது போன்ற மனித தன்மையற்ற செயல்களுக்கு மரணங்களும் காரணமாக அமைகின்றன. எனவே சட்டத்திற்கு புறம்பான, மனித மாண்புக்கு இழுக்கான இது போன்ற செயல்களும், மரணங்களும் இனிமேலும் நடைபெறாமல் தடுக்க அரசு சட்டத்தின் படி தீவிர நடக்கை மேற்கொள்ள வேண்டும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கு சட்டத்தின்படி உரிய அறிவுறுத்தல் களையும், மக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக உள்ளாட்சி வாகனங்களில் தீவிர விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் சட்டத்தை மீறும் தனிநபர் மீதும், பணியமர்த்தும் அதிகாரிகள் மீதும், தவறை கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீதும் பாரபட்சமின்றி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டிருக்கிறது