வெளிநாட்டில் சிக்கியுள்ளோரை மீட்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு

வெளிநாடுகளில் வேலைக்கு சென்று சிக்கி தவிப்பவர்களை மீட்க வேண்டுமென பாத்திமாநகர் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, பாத்திமாநகர் பகுதியிலிருந்து 3 மாத பணிக்காக வளைகுடா நாடுகளுக்கு சென்றவர்கள் பணி முடிந்தும் கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் மேலும் அவர்கள் வருமானமின்றியும் தவித்து வருகின்றனர்.

அவர்களை நம்பி இங்குள்ள குடும்பங்களும் வறுமையில் உள்ளன. எனவே தாங்கள் (ஆட்சியர்) வெளி நாடுகளில் சிக்கியுள்ள எங்கள் பகுதியினை சேர்ந்தவர்களை உடனே மீட்க வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.