கீழக்கோட்டை ஊராட்சி மன்றம் சார்பில் காற்றாலை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கீழக்கோட்டை ஊராட்சி மன்றம் சார்பில் காற்றாலை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கீழக்கோட்டை ஊராட்சி எல்லையில் உள்ள சிற்றாறு வடிநில கோட்டம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பராக்கிரம பாண்டியன் குளம் என்ற (இந்திரகுளம்) தனியார் காற்றாலை மற்றும் தனியார் சோலார் மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்பில் முழுமையாக உள்ளது. அதிக உயர் அழுத்த கோபுரம் மற்றும் சுமார் 250 அதிக உயர் அழுத்த மின் கம்பங்கள் (33,000 V) குளத்தின் உள்ளேயும் கரையோரமும் சட்ட விரோதமாக நடப்பட்டுள்ளது. தற்போதும் நட்டு வருகின்றனர். சட்ட விரோத ஆக்கிரமிப்பு மூலம் விவசாயிகளின் வாழ்வதாரம் மற்றும் விவசாய பெருங்குடி மக்களின் உயிர் பறிபோகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் .