பொதுத்தேர்வை ஒத்திவைக்குமாறு ஆட்சியரிடம் மனு: இந்திய மாணவர் சங்கம்

உலகம் முழுவதும் கொரானா நோய்த்தொற்று காரணங்கள் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாய் பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்து சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். தமிழகத்தில் கொரானா பாதிப்போர் மிகவேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பிற்கு பொது தேர்வு நடத்தப்பட உள்ளது என்ற அறிவிப்பால் ஏற்கனவே கொரானா பயத்தில் உள்ள பெற்றோர்களுக்கு தங்களின் குழந்தைகளின் தேர்வு பயத்தையும் உண்டாக்கியது.. பொதுப் போக்குவரத்தில் முடக்கம் உள்ள நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான முன்னேற்பாடுகள் எதுவுமில்லாமல் அவர்களின் பேருந்து வசதியை உறுதிப்படுத்தாமல் இந்த அறிவிப்பு மாணவர்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. மேலும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களை கல்வி நிலையங்களில் வைத்துள்ள இந்த சூழல் பள்ளியில் வைத்து தேர்வு நடத்துவது என்பது பொருத்தமாக இருக்காது. அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளில் ஏற்கனவே போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தற்போது தேர்வு நடத்துவது என்பது தேர்வு எழுதும் மாணவர்களின் உடல்நலம் எவ்வாறு இருக்கும் என்பதும் பெரும் வேதனையை. மேலும் நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் நோய் மற்றும் தொடர்ந்து வரும் நிலையில் பொதுத்தேர்வு என்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. இது மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் மன உளைச்சலையும் உண்டாக்கும். இதனால் தேர்வின் தேர்ச்சி விகிதம் மற்றும் வருகை வீதம் மிகவும் குறைய வாய்ப்புள்ளது எனவே குறைந்தபட்சம் பள்ளிகள் துவங்கி இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்து தேர்வுகளை நடத்துவது சரியாக இருக்கும் இதனால் மாணவர்கள் தங்களின் அசைவ உணவைத் தவிர்த்து தேர்வு எழுத வழிவகுக்கும். எனவே தமிழக அரசின் மற்ற வகுப்பை போல் கருதாமல் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பத்தாம் வகுப்பு தேர்வு அறிவிப்பை மாற்றியமைத்து தேர்வு நடத்துவதற்கான குறித்த கால அவகாசம் வழங்கி பொதுத்தேர்வை தற்போது ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.