விசைப்படகினை மீட்டுத்தருவது சம்மந்தமாக மீன்துறை இயக்குனருக்கு தருவைகுளம் மீனவர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு

விசைப்படகினை மீட்டுத்தருவது சம்மந்தமாக மீன்துறை இயக்குனருக்கு தருவைகுளம் மீனவர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. அம்மனுவில் கூறியதாவது “எங்களது பருவலை மீன்பிடி சங்கத்தைச் சார்ந்த திரு. M.சேவியர் ரூபன்ஸ் என்பவரது IND-TN-12-mm-5026 என்ற எண் கொண்ட விசைப்படகு தருவைக்குளம் மீன்பிடித் தங்குதளத்திலிருந்து மீன்பிடி தடைக்காலம் முடிந்து 18.06.2020 அன்றுதான் முதன்முதலாக 8 தொழிலாளர்களுடன் தொழிலுக்குச் சென்றது. சுமார் இரண்டு அரை இலட்சம் ரூபாய் செலவு செய்து தொழிலுக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் 16 நாட்கள் சென்ற நிலையில் 06.07.2020 அன்று கரை திரும்பும் நேரத்தில் தருவைக்குளம் வந்து சேர டீசல் குறைவாக இருந்த காரணத்தினாலும், கடலின் நீரோட்டம் அதிகமாக இருந்த காரணத்தினாலும் தேங்காய்ப்பட்டிணம் துறைமுகத்தில் டீசல் நிரப்ப சென்றுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணத்தினால், படகு உரிமையாளர் அங்கு செல்ல முடியாத காரணத்தினால் தேங்காய்ப்பட்டிணத்தைச் சேர்ந்த நபர்களான 1. ராதாகிருஷ்ணன் RI (9444517341) 2. விணோ (6374046965) ஆகியோரைத் தொடர்பு கொண்டுள்ளார். மேற்படி நபர்கள் நாங்கள் டீசல் நிரப்பித்தருகிறோம் என்று கூறியதனால் அதை நம்பி தேங்காய்ப்பட்டிணம் துறைமுகத்திற்குள் மேற்படி விசைப்படகு சென்றது

ஆனால் மீன்துறைக்கும், கடலோர காவல்படைக்கும் தகவல் கொடுக்கத் தவறியதால் துறைமுகத்திற்குள் சென்ற விசைப்படகினை கண்ட பொதுமக்கள் படகையும் அதில் தொழில் செய்த 8 தொழிலாளர்களையும் பிடித்து வைத்துள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த மீன்துறை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் மேற்படி விசைப்படகினை சட்டத்திற்கு புறம்பாக வந்ததென கூறி மீன்வளத்துறையின் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்,

மேலும் படகிலிருந்த மீன்களை 5 ஊர் கமிட்டியினர் பிரித்து எடுத்துச் சென்றுவிட்டனர் அதனால் விசைப்படகிற்கு அவர் செலவு செய்து அனுப்பிய பணமும் வீணாகி பிடித்துவந்த மீன்களையும் இழந்து வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி தவித்து வருகிறார்

அதனால் தொழிலாளர்களின் நலனையும் விசைப்படகு உரிமையாளர் நலனையும் கருத்தில்கொண்டு அவர்களுக்கு மன்னிப்பு அளிக்குமாறும், இனிமேல் இதுபோன்ற தவறு செய்ய மாட்டார்கள் என்று உறுதியளிக்கிறோம்

மேற்படி விசைப்படகினையும், தொழிலாளர்களையும் மீன்வளத்துறையின் சட்ட நடவடிக்கையிலிருந்து விடுவித்துத்தருமாறு தங்களை விரும்பி கேட்டுக் கொள்கிறோம்” என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.