உதவித்தொகை வழங்க கோரி இளம்பெண் ஆட்சியரிடம் மனு : தூத்துக்குடி

உதவித்தொகை வழங்க கோரி தூத்துக்குடி ஆட்சியரிடம் இளம்பெண் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள்குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி கோமஸ்புரம் குடிசை மாற்று வாரியத்தை சேர்ந்தவர் செல்லம்பிள்ளை மகள் சந்தனமாரி. இவர் தூத்துக்குடி ஆட்சியரை சந்தித்து அளித்த மனுவில், எனக்கு 25 வயதாகிறது. ஆனால் உடல் வளர்ச்சி இல்லை. மேலும் தாய்,தந்தை பராமரிப்பில் இருந்து வந்தேன். தற்போது எனது தாய், தந்தைக்கு வயதாகி விட்டதால் என்னை ஆதரிக்க வேறு யாரும் இல்லை. எனவே எனது வாழ்வாதாரத்திற்கு உதவிதொகை வழங்க வேண்டுமென தங்களை கேட்டு கொள்கிறேன் என மனுவில் தெரிவித்துள்ளார்.