தெருக்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு: காமராஜர் நற்பணி மன்றம்

தருவைகுளம் ஊருக்குள்ளே தெருக்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கு காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் மனு ஒன்றை அளித்தனர். மனுவில் தருவைகுளம் ஊருக்குள்ளே பெருகிவரும் கறிக்கடைகளாலும், இரவு நேரக் கடைகளினாலும் தெரு நாய்கள் வேகமாக பெரும் எண்ணிக்கையில் அதிகமாகி விட்டன. சுமார் ஆயிரம் நாய்களுக்கு மேல் சுற்றித் திரிகின்றன. இந்த தெரு நாய்கள் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோரை குறைத்துக்கொண்டே கடிப்பதற்கு விரட்டுகின்றனர். அதனால் பல முறை இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து கைகால்களை உதைத்துக் கொண்டு உள்ளனர். சிறியவர்கள் மற்றும் பெண்கள் தெருக்களில் நடந்து செல்வதையும் விரட்டுகின்றன. பொது மக்கள் தெருக்களில் நடமாடவே அச்சம் கொள்கின்றனர், ஆகவே இதுசமயம் தாங்கள் தலையிட்டு தெருநாய்களை ஊரில் இருந்து அப்புறப்படுத்தி பொது மக்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என கேட்டுக் கொண்டிருந்தனர்.