ஆற்றங்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொது மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு: விளாத்திகுளம்

விளாத்திகுளம் வட்டம் ஆற்றங்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொது மக்கள் சார்பில் சட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், ஆற்றங்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆற்றங்கரை, 0.துரைச்சாமிபுரம், A.கந்தசாமிபுரம். விளாத்திகுளம் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறையின் கீழ் பராமரிப்பில் உள்ள சிறிய கண்மாய் மற்றும் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள பல லட்சம் மதிப்புள்ள சீமை கருவேல மரங்களை முறையாக ஏல அறிவிப்பு செய்யாமல் பொதுப்பணித்துறை அதிகாரி அவர்களால் முறைகேடாக கடந்த பல ஆண்டுகளாக தனி ஒரு நபருக்கு விற்று விதிமுறைகளை மீறி சட்டத்திற்கு புறம்பான முறையில் மரங்களை வெட்டி வருகிறார்கள். சட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மற்றும் சீமை கருவேல மரங்களை பொது ஏல முறையில் வெளிப்படை தன்மையுடன் ஏலம் விட்டு கண்மாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.