வேலூர் மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி: மாவட்ட ஆட்சியர் தகவல்

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. மதுரை அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நாட்டு மாடுகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தற்போது வேலூர் மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடத்த 44 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். மாடுகளுக்கு போதை பொருட்கள் கொடுப்பவர்கள், காயம் ஏற்படுத்துவார்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.