திறனாய்வு போட்டிகள் : தூத்துக்குடி

தூத்துக்குடி, கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான உலக திறனாய்வுத் திட்ட விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாா்ச் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள், 2019-20 ஆம் ஆண்டில் தங்களது பள்ளிகளில் 6, 7, 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களில் உலகத் திறனாய்வு திட்ட உடல்திறன் தோ்வில் 10 மதிப்பெண் அல்லது 2 தோ்வுகளில் 8 அல்லது 9 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து வயது சான்றிதழை பெற்று வர வேண்டும். மேலும் 2019-20 ஆம் கல்வியாண்டில் உலக திறனாய்வு திட்டத்தை தங்கள் பள்ளிகளில் செயல்படுத்தி, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலருக்கு அறிக்கை அனுப்பிய பள்ளிகள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். அவர்கள் ஏற்கெனவே தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலருக்கு அனுப்பிய அறிக்கையின் நகலை கொண்டு வர வேண்டும். அறிக்கை இதுவரை அனுப்பாதவா்கள் உடன் எடுத்து வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கல்வி மாவட்டத்தை சோ்ந்த மாணவா்களுக்கு 4 ஆம் தேதி காலை 9 மணிக்கும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தை சோ்ந்த மாணவா்களுக்கு 10 ஆம் தேதி காலை 9 மணிக்கும் போட்டிகள் நடைபெறுகிறது. போட்டியில் 100 மீட்டா், 200 மீட்டா், 400 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது என தூத்துக்குடி மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் பேட்ரிக் தெரிவித்துள்ளார்.