தூத்துக்குடியில் அக்டோபர் 3ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் – மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தகவல்

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமரச தீர்வு மைய கட்டிடத்தில் தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி/தலைவர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு திரு. N.லோகேஷ்வரன் தலைமையில் 03.10.2020 அன்று காலை 11.00மணி அளவில் மக்கள் நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட உள்ளது

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் வருகிற 03.10.2020 அன்று மாநிலம் முழுவதும் சிறுசிறு அளவில் (State wide micro level regular Lok Adalat) தொடர்ச்சியாக மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட உள்ளது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமரச தீர்வு மைய கட்டிடத்தில் வைத்து தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி/தலைவர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு திரு. N.லோகேஷ்வரன் அவர்கள் தலைமையில் 03.10.2020 அன்று காலை 11.00மணி அளவில் மேற்படி மக்கள் நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

மேற்படி மக்கள் நீதிமன்றத்தில் அனைத்து வகையான சிவில் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகளும், காசோலை மோசடி வழக்குகளும், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகளும், சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகளும் தீர்வு காணப்பட உள்ளது.

எனவே மேற்படி மக்கள் நீதிமன்றத்தை பொதுமக்கள், வழக்குதார்கள், வழக்கறிஞர்கள், வங்கித்துறையினர், காப்பீடு நிறுவனத்தினர், காவல் துறையினர் மற்றும் அனைத்து அரசு துறையினர் கலந்து கொண்டு வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு கண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *