குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்!!! – தூத்துக்குடி

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியில் சாலைகளில் குழாய் பதிக்கும் வேலைகள் நடைபெற்று வருவதால் குடிநீர் விநியோகம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு வாரமாக குடிநீர் வராமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதை அரசு கண்டுக்காமல் இருப்பதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாண்டி என்பவர் தலைமையில் 40 பெண்கள் உட்பட 70 பேர் தூத்துக்குடி டேவிஸ்புரம் பிரதான சாலையில் வட்டக்கோவில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து வடபாகம் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் பாேலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாெது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் மாநகராட்சி இன்ஸ்பெக்டர் மாரியப்பன், மற்றும் அதிகாரிகள் இன்று இரவுக்குள் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.