பூபாண்டியபுரம் பகுதியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என்பதால் அப்பகுதியில் மக்கள் செல்வதற்கு தடை

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பூபாண்டியபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தை சார்ந்த தந்தை மற்றும் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி என்பதால் அப்பகுதியில் மக்கள் செல்வதற்கு தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, மாப்பிளையூரணி ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதரத்துறை ஆய்வாளர் அவர்களின் தலமையில் தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் ஏற்கனவே (9/07/2020) அன்று ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி என்ற நிலையில் தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி என்பதால் அப்பகுதியில் மக்கள் செல்வதற்கு தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டு சுகாதரத்துறை மூலம் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.