அகிம்சை

உண்மையான அகிம்சை என்பது மற்றவர்களை சொற்களால் கூட புண்படுத்தாமல் இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பெரும்பாலான மக்கள், ஒருவரையும் ஸ்தூலமாக காயப்படுத்தவேண்டும் என்று சிந்திப்பதில்லை. ஆனால் சில சமயங்களில், நம்முடைய வார்த்தைகள் மூலமாக மற்றவர்களை புண்படுத்துகின்றோம். இது மற்றவர்களில் எதிர்மறையை உருவாக்குவதோடு, நம்மையும் அந்த எதிர்மறை பாதிக்கின்றது. புண்படுத்தும் வார்த்தைகள் அனைவரையும் ஆழமாக பாதிக்கின்றன.

செயல்முறை:

உண்மையான அகிம்சை நிறைந்த வாழ்க்கை வாழவேண்டுமென்றால், என்னுடைய வார்த்தைகளில், நான் விசேஷமான கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களை புண்படுத்தாத வார்த்தைகள், மற்றவர்கள் மீது உள்ள நல்லாசிகள் மற்றும் தூய உணர்வுகளை அடிப்படையாகக்கொண்ட நேர்மறையான எண்ணங்களின் பலனாகும்.