கரோனா வார்டில் எண்ணிக்கை அதிகரிப்பு : கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவில்பட்டி மில் தெருவைச் சேர்ந்த 24 வயதில் வயதில் ஒரு வயதில் ஒரு வயதில் ஒரு நபர்,  முகமது சாலிஹாபுரத்தைச் சேர்ந்த 39 வயது நபர், மேலப்பட்டியைச் சேர்ந்த 63 வயதான முதியவர்,  கயத்தாறைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டி ஆகியோர்
தொடர் இருமலால் பாதிக்கப்பட்ட அவர்கள் 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அவர்களது ரத்த மாதிரிகளை சேகரித்து, ஆய்வக பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.