வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவை ஜூலை 15 வரை ரத்து

வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவை ஜூலை 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் வெளிநாட்டு சரக்கு விமான சேவைக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது, கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து ஜூலை 15 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், டிஜிசிஏ அனுமதி வழங்கியுள்ள சரக்கு விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரல்(டிஜிசிஏ) அலுவலகம் தெரிவித்துள்ளது.