பங்குனி உத்திர விழா ரத்து : திருச்செந்தூர்

கரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக, தற்போது திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகம விதிப்படி வழக்கமான பூஜைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, ஏப். 6-ம் தேதி நடைபெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என திருக்கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.