அமெரிக்காவிலிருந்து சீனா செல்லவுள்ள பாண்டா கரடி

அமெரிக்கா- சீனா இடையிலான கூட்டுறவு இனப்பெருக்க ஒப்பந்தபடி, சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு பாண்டா கரடிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்தவகையில் கொண்டு வரப்படும் பாண்டா கரடிகள் ஈன்றெடுக்கும் குட்டிகளுக்கு 4 வயதானதும், அவை சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வாஷிங்டனில் உள்ள விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்படும் Mei Xiang என்ற பாண்டா கரடி மூலம் பிறந்த குட்டிக்கு தற்போது 4 வயதாகியுள்ளது. ஒப்பந்தப்படி வரும் 19ம் தேதி இந்த குட்டி சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதால், பலரும் பாண்டா கரடி குட்டியை காண ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

credits : PolimerNews