தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆண்டு தோறும் சித்திரை மாத கடைசி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. தற்போது கொரானா தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்திரவினை மே 17 ஆம் தேதி வரை நீடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பொதுமக்களின் நலன் கருதியும் கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்துடன் பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும் விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் சித்திரை கடைசி வெள்ளி மே 8ம்தேதி அன்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழா நடத்துவதற்கு அனுமதி இல்லை என்பதையும் அன்றைய தினம் தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பாஞ்சாலங்குறிச்சி வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
