கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பொதுமக்களை பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்க தடையில்லை என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் திமுக கழகத் தலைவர் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கொரோனா தொற்று காரணமாக அரசால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் போல்டன்புரம் பகுதியில் உள்ள சுமார் 275 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை, முன்னாள் சமூகநலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான திருமதி. பெ.கீதாஜீவன் எம்எல்ஏ., அவர்கள் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.
