இக்லியா (ECLIA) தானியங்கி பரிசோதனை உபகரணம் ஒரு கண்ணோட்டம்

இக்லியா (ECLIA) வேதியியல் பொருள் அளவை கண்டறியும் தானியங்கி பரிசோதனை உபகரணம் திறப்பு நிகழ்ச்சி

இக்லியா (ECLIA) தானியங்கி உபகரணத்தின் மதிப்பு 25 இலட்சம் ரூபாய்

இக்லியா (ECLIA) உபகரணம் கொரோனா நோயாளிகளின் நலனை கண்கானிப்பதற்காக வாங்கப்பட்டுள்ளது.

இக்லியா (ECLIA )கருவி IL6 என்னும் வேதியியல் பொருளின் அளவை கண்டறிவதன் மூலம் கோவிட் 19 நோய் தீவிரமடையும் வாய்ப்பை நோயின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுகிறது. இதனால் தகுந்த மருத்துவத்தை விரைவிலேயே ஆரம்பித்து இறப்பு விகிதத்தை குறைக்க உதவுகிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான் இந்த கருவி முதன்முறையாக அமைக்கப்படுகிறது.

கொரோனா நோயளிகளுக்கு செய்யப்படும் IL6 சோதனைகளை தவிர்த்து அவர்களுக்கு அவசியம் தேவைப்படும் FERRITI, TROPT, PROCALCITONIN, VITAMIN D பரிசோதனைகளும் இவ்வுபகரணத்தின் மூலம் பரிசோதிக்க இயலும்.

இக்லியா (ECLIA) கருவியின் மூலம் ஹார்மோன் பரிசோதனைகளும் புற்று நோயளிகளுக்கான பரிசோதனைகளும் HIV நோயாளிகளுக்குரிய சோதனைகளும் மஞ்சள் காமாலை குறித்த பரிசோதனைகளும் துல்லியமாக சோதிக்கலாம்.

இக்லியா (ECLIA) உபகரணத்தின் மூலம் மிக வேகமாக அதாவது 18 முதல் 27 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை அறிய முடியும்.