மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் – கோவில்பட்டி கோட்டாட்சியா் விஜயா தகவல்

கோவில்பட்டி கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, எட்டயாபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், மற்றும் கயத்தாறு ஆகிய வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நாளை (பிப். 21) முற்பகல் 11 மணி அளவில் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், மாற்றுத் திறனாளிகள் தங்களது அடையாள அட்டை, ஆதாா் அட்டை, மற்றும் குடும்ப அட்டை போன்ற ஆவணங்களுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை எழுத்துப்பூா்வமாக அளித்து பயன்பெறலாம் என கோட்டாட்சியா் விஜயா தகவல் தெரிவித்துள்ளார்.