ஊரடங்கு விடுமுறையில் நம்ம வீட்டு குட்டீஸ்

தற்போது உலகமெங்கும் கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தி வருவதால் மத்திய அரசு முழு ஊரடங்கைப் பிறப்பித்து உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு மூலம் வீட்டில் இருக்கும் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர், இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ராஜபாளையம் கிராமத்தில் வசிக்கும் R. மரிய ரெனிலியா, இக்குழந்தை ஊரடங்கு விடுமுறை நாட்களில் தனது வீட்டிற்குள்ளே குட்டி வீடு ஒன்று அமைத்து அதில் சமையல் செய்து, திருடன் போலீஸ் விளையாட்டு, படங்களை சேர்க்கும் பசில்ஸ் விளையாட்டு என தனது இரு தங்கைகளுடன் சேர்ந்து விளையாடி என்ஜோய் பண்ணி கொண்டு இருக்கிறார். மேலும் படங்கள் வரைவதும், புத்தகங்கள் படிப்பதும், அம்மாக்கு தேவைப்படும் நேரத்தில் சிறு சிறு உதவிகளும் செய்து வருகிறார் நம்ம வீட்டு குட்டீஸ். இவர்களை பார்க்கும் பொழுது நாமும் சிறு வயதிலேயே இருந்திருக்கலாம் என்று தோணுகிறது.