பொதுத் தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்க உத்தரவு

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளித் தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பான கோரிக்கையை ஏற்று நீதிபதிகள், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்க உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். நாளையுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வும், மார்ச் 26 ஆம் தேதியுடன் பிளஸ் 1 பொதுத் தேர்வுகளும் முடிவடைய உள்ளதால் அதுவரை மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும், முக்கியமாக போக்குவரத்து சேவையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.