நல்லாசிரியர் விருதை ஒப்படைக்க வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சோழியனுர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அல்லி முத்து.இவருக்கு தமிழக அரசு பள்ளி கல்வி துறை சார்ப்பில் சிறந்த நல்லாசிரியர்க்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதை இருமுறை வழங்கி உள்ளது.இவர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனக்கு அளிக்கப்பட்ட நல்லாசிரியர் விருதை தருமபுரி ஆட்சியர் மலர்விழியிடம் ஒப்படைத்தார்.5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்துவதால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்தாக அவர் கூறினார்.இதனை ஏற்க மாவட்ட ஆட்சியர் மறுத்துவிட்டார்.நல்லாசிரியர் விருது பெற்ற அல்லி முத்துவிடம் இருந்து கோரிக்கை மனுவை மற்றும் பெற்று கொண்ட ஆட்சியர் அதை அரசுக்கு தெரியப்படுத்தி அடுத்தவாரம் பதில் பெற்று தருவதாக கூறினார்.