போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அலுவலர்கள் தவிர மாணவர்கள் உட்பட யாரும் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பல்கலைக்கழகம் வந்த அவரை உள்ளே செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை. எனவே நுழைவுவாயில் பகுதிக்கு வந்த போராட்டக்குழுவினரிடம் நான் கட்சிக்காரனாக இங்கு வரவில்லை. என் ஆதரவை தெரிவிக்கவே வந்தேன். இங்கு படிக்கும் வெளிமாநில மாணவர்கள் தரமணியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். திடீரென விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு உடனே விடுதியையும் மூடிவிட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசே தன் சொந்த மக்களை அகதிகளாக மாற்றுகிற சட்டங்கள் மக்களுக்கு பயன்படாது. அவை மாற்றப்பட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என அவர் கூறினார்.