உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துக் கடைகள் திறப்பு : தூத்துக்குடி

விவசாயிகளின் நலன் கருதி அனைத்து உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துக் கடைகளை திறந்து வைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் முகைதீன் கூறியதாவது :- தூத்துக்குடி மாவட்டத்தில், கயத்தாறு வட்டாரத்தில் நிலக்கடலை மற்றும் கோடை பருத்தி சாகுபடியும், ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட சில இடங்களில் காய்கனி பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதுதவிர, வாழை, முருங்கை, பருத்தி, காய்கனிகள் சாகுபடி செய்யப்படும் நிலையில் அவற்றுக்கு உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் தேவைப்படுவதாக விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இதனை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உரக்கடைகள், பூச்சிக் கொல்லி மருந்துக் கடைகளில் விவசாயிகள் தேவையான இடுபொருள்களை கடைகளில் ஒரு மீட்டா் இடைவெளி விட்டு நின்று பொருள்களை வாங்கிக் கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.