வட்டார பெருந்தலைவர் காமராஜர் நாடார் சங்கத்தின் திறப்புவிழா!!!

சென்னை  எம்.எம்.டி.ஏ, மாத்தூர், மணலி வட்டார பெருந்தலைவர் காமராஜர் நாடார்  சங்கத்தின் திறப்புவிழா பிப்ரவரி 23ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மணலி மாத்தூரில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி சங்கத்தின் தலைவர் மணலி ஆர்.குமார் தலைமையிலும்,

துணை செயலாளர் என்.சிவகுமார், பொருளாளர் ஜி .விக்டர் டினேஷ், துணைத்தலைவர் எல்.ஜெயச்சந்திரன், ஆலோசகர்கள் எம்.மரியா சந்தோசம், எம்.ஜோசப், இணை செயலாளர்கள் பி.முத்துராஜ், ஏ .அழகுவேல் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னதாக சங்கத்தின் செயலாளர் எஸ்.இராசு அனைவரையும் வரவேற்று பேசினார்.

சங்கத்தை தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் குத்துவிளக்கேற்றி சங்கத்தை திறந்து வைத்து விழா சிறப்புரை ஆற்றினார்கள்.

தலைவரை தொடர்ந்து பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் புழல் டாக்டர். தர்மராஜ், தமிழ்நாடு அணைத்து வணிகர் சங்கங்களின் தலைவர் கொளத்தூர் த .ரவி,பெருந்தலைவர் மக்கள் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி .ராபர்ட், சங்கத்தின் சட்ட ஆலோசகர்கள் ஆர்.ஆனந்தபாண்டியன், ஜி.கார்த்திக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில் சங்கத்தின் இணைச்செயலாளர் ஜே.ஜோசப் நன்றி கூற .நிகழ்ச்சி இனிதே முடிந்தது.