14 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது, கொரோனா வைரஸ் மூலம் தனிமைப்படுத்தபட்ட இன்னாசியார்புரம் பகுதி

தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் மூலம் தனிமைப்படுத்தபட்ட இன்னாசியார்புரம் பகுதி இன்று (03/06/2020) காலை மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிா்வாகத்தால் திறக்கப்பட்டது.

மே 21ம் தேதி ஓய்வுபெற்ற பங்குதந்தை ஒருவருக்கு கொரோன வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடி இன்னாசியார்புரம் பகுதியில் உள்ள பிரதான சாலையான சேதுபாதை ரோடு, அமெரிக்கன் ஆஸ்பத்திரி சந்திப்பிலிருந்து டிஎஸ்எப் மீன் கம்பெனி வரை சாலைகள் மூடப்பட்டு அப்பகுதியில் வேறு நபர்கள் நுழைய தடை விதித்து தனிமைபடுத்தப்பட்டது.

இந்நிலையில் 14 நாட்களுக்கு கழித்து அப்பகுதி இன்று (03/06/2020) காலை மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிா்வாகத்தால் திறக்கப்பட்டது. 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வேறு யாருக்கும் தொற்று வராவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.