அனைத்து அனல்மின் நிலையங்களில் ஒரு யூனிட் மட்டும் இயக்க வேண்டும்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து அனல்மின் நிலையங்களிலும் ஒரு யூனிட் மட்டும் இயக்குவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2-வது யூனிட் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர 1, 3, 4 ஆகிய யூனிட்டுகளில் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி 210 மெகா வாட்டாக குறைந்துள்ளது.