மீண்டும் உச்சத்தை தொட்ட வெங்காய விலை

கடந்த சில வாரங்களாக வெங்காய விலை நாடு முழுவதும் தாறுமாறாக உயர்ந்த நிலையில் வெங்காய தட்டுப்பாட்டை போக்க எகிப்து நாட்டில் இருந்து தமிழகத்தில் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட பிறகு வெங்காய விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போது மீண்டும் கோவை சந்தையில் கிலோ வெங்காயம் 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது தாறுமாறாக உயர்ந்து ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 170 ரூபாயும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விறக்கப்படுகிறது.