கொரானா தடுப்பு ஆய்வுக்கூட பணிக்காக ஒரு லட்சம் காசோலை : நாகஜோதி டிரஸ்ட்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக்கூடத்தில் தடுப்பு பணிக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கோவில்பட்டி நாகஜோதி டிரஸ்டின் நிறுவனத்தின் சார்பில் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அவர்களிடம் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி.ஆர்.சத்யா மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் திரு.பி மோகன் மற்றும் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.