தூத்துக்குடியில் கொரோனாவால் ஒருவர் பலி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

தூதூத்துக்குடியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த விருதுநகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

விருதுநகர் மாவட்டம், புன்னகவுண்டன்பட்டி ஊரைச் சேர்ந்த மணிகண்டன், 34 வயது இளைஞர். இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆறாம் தேதி கோவில்பட்டியிலிருந்து நோய்தொற்று கண்டுபிடிக்கப்பட்டு 7ஆம் தேதி தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது மூன்றாக உயர்ந்துள்ளது.