‘வளரும் படைப்பாளர்களுக்கு வழிகாட்டல்’ – ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வகுப்புகள்

தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) நடத்தும் ‘வளரும் படைப்பாளர்களுக்கு வழிகாட்டல்’ ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வகுப்புகள் 11.03.20 அன்று நட்சத்திர அரங்கத்தில் நடைப்பெற்றது.

விழாவில் அருட்சகோதரி முனைவர் மி.சு.எழிலரசி (உதவிப் பேராசிரியர்; தமிழ்த்துறை) வரவேற்புரையாற்றினார். அருள்சகோதரி பி.மேரி ஜாய்ஸ் பேபி (சுயநிதி பிரிவு இயக்குனர்) தலைமையுரை வகித்தார். விழாவில் திரு சோ.தர்மன் (சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்) மற்றும் திரு.கண்ணகுமார.விஸ்வரூபன்(தேரி இலக்கியவாதி) சிறப்புரையாற்றினார்கள். முனைவர் பி.செல்வேமேரி (உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை) நன்றி உரை வழங்கினார். திருமதி செ .ஜெய செல்வி (உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை) மற்றும் ஹ.தங்கரதி & பெ. பொன் வெண்ணிலா (மூன்றாம் ஆண்டு உளவியல் துறை)நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.