ஒருநாள் தேசிய கருத்தரங்கம் : தூய மரியன்னை கல்லூரி

தூய மரியன்னை கல்லூரியின் சுயநிதி ஆங்கிலத்துறைச் சார்பாக “இடப்பெயர்வுகளின் கூறுரை மற்றும் கலாச்சார கலப்பு” என்னும் தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் 16.03.2020 அன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருள் சகோதரி முனைவர் லூசியா ரோஸ் மற்றும் சுயநிதி பிரிவு இயக்குனர் அருள் சகோதரி மேரி ஜாய்ஸ் பேபி ஆகியோர் தலைமை ஏற்றார்கள். கருத்தரங்கின் சிறப்பு விருந்தினர்களாக மதுரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் கிறிஸ்டோபர் ரமேஷ் , மதராஸ் கிறிஸ்டின் கல்லூரி பேராசிரியர் முனைவர் சாமுவேல் ரூபஸ், திருச்சி தூய ஜோசப் கல்லூரி பேராசிரியர் முனைவர் சேவியர் பிரதீப் சிங் மற்றும் மதுரை தியாகராஜர் கல்லூரி பேராசிரியர் முனைவர் கவிதா ஆகியோர் கலந்து தங்கள் அனுபவ ஞானத்தைப் பங்குபெற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்களும், ஆசிரியர்களும், அறிஞர்களும் கலந்து கொண்டனர். சுயநிதி பிரிவு ஆங்கிலத்துறைத்தலைவர் மரிய சஹாய ஷர்மிளா அவர்கள் நன்றி உரை வழங்கினார்கள் .