ஏற்றுமதி சட்டதிட்டங்கள் மற்றும் வழிமுறைகள் பற்றிய ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம் : தூத்துக்குடி

ஏற்றுமதி சட்டதிட்டங்கள் மற்றும் வழிமுறைகள் பற்றிய ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடியில் நடைப்பெற உள்ளது. முகாமானது இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம், சென்னை மற்றும் தூத்துக்குடி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்கம் (துடிசியா) இணைந்து நடத்தப்படுகிறது. முகாம் தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனி ராம்நகரில் உள்ள துடிசியா அரங்கத்தில் வருகிற மார்ச் மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. 

முகாமில் ஏற்றுமதி செய்வதற்கு தேவையான பதிவுகள், காப்பீடுகள், ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலை நிர்ணயம், கடனால் ஏற்படும் இடையூறு மேலாண்மை, இந்திய அரசின் ஏற்றுமதி கொள்கை மற்றும் திட்டங்கள் பற்றி DGFT, FIEO மற்றும் ECGC போன்ற நிறுவனங்கலிருந்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 9443980951 அல்லது 9791423277 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.