கொரானோ தொற்று காரணமாக கடந்த 2-ஆம் தேதி திமுக MLA ஜெ.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையிலிருந்த அவர் இன்று காலை 8.05 மணியளவில் உயிரிழந்தார்.
1958 ஜூன் 10- ஆம் தேதி பிறந்த ஜெ.அன்பழகனுக்கு இன்று 62 வது பிறந்தநாள்.
ஏற்கனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடை பெற்றிருந்தது. திமுகவில் கடந்த 15 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தவர் ஜெ அன்பழகன்.