மகாராஷ்டிர அரசிடம் இருந்து 48 பேரை மீட்க தூத்துக்குடி உன் உரிமை ஓட்டுநர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் வேதக் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் ஓட்டுநர் பணிபுரிந்து வருகிறார். அவரது பணி நிரந்தரமாக்கும் வேலையாக குஜராத் சென்றிருந்தார். அந்த சமயத்தில் கொரானா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு போடப்பட்டது இதனால் மகாராஷ்டிரா மாநிலம் சர்தார் என்னுமிடத்தில் 14 நாட்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். மகாராஷ்டிர அரசு அங்கு ஒரு விடுதியில் அவரை தங்க வைத்துள்ளனர். அங்கு அவர் உணவின்றி தவித்து வருகிறார். இன்று சுப்பிரமணியம் அவரின் மனைவி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மகாராஷ்டிர அரசிடம் இருந்து கணவரை மீட்டு தருமாறு மனு கொடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு உன் உரிமை ஓட்டுநர் நல சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மேலும் 48 பேர் உணவின்றி தவித்து வருகிறார்கள் அவர்களையும் மீட்டு தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்கள்.