தூத்துக்குடி தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் பொது மக்களுக்கு 500 முககவசம், கையுறை, வழங்கப்பட்டது

தூத்துக்குடி தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் பூபால்ராயபுரத்தில் பொது மக்களுக்கும், சுகாதார பணியாளர்கள், வியாபார பெருங்குடி மக்களுக்கும் 500 முககவசம், கையுறை, வழங்கப்பட்டது.

கழக பொது செயலாளர், மக்கள் செல்வர், டிடிவி தினகரன் எம்எல்ஏ, அவர்கள் ஆணைபடி கழக தேர்தல் பிரிவு செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் ஊராட்சி ஒன்றிய தலைவர், திரு SVSP மாணிக்கராஜா அவர்கள் ஆலோசனைபடியும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் புவனேஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் L. எட்வின் பாண்டியன் அவர்கள் 500 முககவசம் கையுரை பூபாலராயர்புரம் பகுதி மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அப்பகுதியைச் சார்ந்த சுகாதார பணியாளர்களுக்கும் வழங்கினார். அப்போது கல்யாணசுந்தரம், லூர்துசாமி,சசிகுமார், அமலானந்தம், சுடலைமுத்து, தீபக், சகாயராஜ், பிரைட்டன், ஆனந்தபாண்டியன் மற்றும் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகளும், கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.