மீனவர்கள் சங்கம் சார்பில் H. வசந்தகுமார் MP க்கு நன்றி தெரிவித்தனர்

தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன் பிடிக்க சென்ற போது உலக நாடுகளில் கொரனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4-ங்கு மாதங்களாக தாய்நாட்டுக்கு திரும்ப முடியாமல் மீனவர்கள் அவதிபட்டு வந்தனர். இந்நிலையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்தகுமார் MP பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்து, பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த பின்னர் நாளை 01.07.2020 காலை 7 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 610 மீனவர்கள் மற்றும் பிற மாவட்டத்தை சேர்ந்த 41 மீனவர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வருகின்றனர். அவர்கள் தனிமை படுத்தபட்டு பரிசோதனைக்கு பின்னர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே மீனவர்களை சொந்த ஊருக்கு வர பெரும் முயற்சி செய்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்தகுமார் MP க்கு மீனவர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்தனர்.