பனை ஓலையில் செய்யப்படும் தொழில்கள் ஊரடங்கால் பாதிப்பு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்திற்குட்பட்ட பூப்பாண்டியாபுரம் பகுதியில் மூங்கில் கூடை, பனை நாாில் செய்யப்படும் கூடை மற்றும் பனை ஓலையில் செய்யப்படும் சிறுதொழில் செய்யும் தொழிலாளா்கள் அதிகம் வாழும் பகுதியாகும். தற்போது ஊரடங்கு உத்தரவால் தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதால் மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல், சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். நமது அரசாங்கம் ரூபாய் 1000 மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கி உள்ளது இது எப்படி எங்களுக்கு 1 மாதம் காணும், இது வரையில் யாரும் இந்தப் பகுதிக்கு கேட்க கூட வரவில்லை, எப்படி இருக்கோம் என்று கூட பார்க்க யாரும் வரவில்லை என்று ஆதங்கத்துடன் கூறும் பெண்.

மேலும் பூப்பாண்டியாபுரம் கூடை பின்னும் பெண்கள் நமது Timestampnews செய்தியாளர்களிடம் கூறும் போது – நான் பிறந்து 13 வயதிலிருந்து இந்த வேலை தான் பாா்கிறேன் நாங்க கஷ்டத்தில் தான் இருக்கோம் எங்களை யாருமே வந்து பாா்க்கவில்லை இருக்க வீடு வாசல் கிடையாது வாடகைக்குத் தான் குடியிருக்கோம் நாா்க்கூடை பின்னுகிறோம், கோழிக்கூடை பின்னுகிறோம். மொத்தம் 200 குடும்பம் இருக்கிறது நாா்ப்பெட்டி முனைகின்றாா்கள். பிளாஸ்டிக் டேப் வாங்கி கூடை பின்னுகிறாா்கள் சராரசாியாக ஒருவருக்கு நூறிலிருந்து நூற்றி ஐம்பது வரை கிடைக்கும் இப்போ அதுவும் கிடைக்கல, பொருளும் கிடைக்கல, வாங்க ஆளுமில்ல மக்கள் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்படுகிறாா்கள். கொரோனா நோய் பரவியதால் ஆயிரம் கொடுத்தாங்க ரேஷன் அாிசி கொடுத்தாங்க எல்லாம் காலியாகிவிட்டது என்றாா் முத்துமாாி. தொடா்ந்து மற்றொரு அம்மா மாாியம்மா கூறும் போது நாங்க கூடை பின்னும் தொழில் செய்ரவங்க இந்த தொழிலுக்கு பொருட்கள் கிடைக்கவில்லை. அப்படியே நாங்கள் கஷ்டப்பட்டு செய்து கொண்டு போனால் வாங்க ஆளில்லை, விசைப்படகுகளுக்கு கூடை பின்னி கொடுப்போம் கோழி கூடு செய்வோம் கறி மூட்டத்துகு கூடை கொடுப்போம் உப்பு மில்லுக்கு கூடை கொடுப்போம் இந்த வேலைகள் இப்போ கிடையாது தடை உத்தரவு வந்து 1-1/2 மாதமாகிவிட்டது. கொரோனா கொரோனா என்று சொல்லி யாரும் வேலைக்கு போகல, ஆயிரம் வாங்கி ஒன்னும் பன்னமுடியாது. இது வரையில் யாரும் இந்தப் பகுதிக்கு கேட்க கூட வரவில்லை என்று கூறினாா்.