அரசியல் தலையீடு இருப்பது என்ற தகவலெல்லாம் உண்மையல்ல: சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி சங்கர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீது சாத்தான்குளம் காவலர்கள் நடத்திய தாக்குதல் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி சங்கர் கூறியதாவது, “முதல் தகவல் அறிக்கையில் 5 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் காவலர் முத்துராஜை தவிர 4 பேரை கைது செய்துள்ளோம்.

தலைமறவாகியுள்ள முத்துராஜை இரண்டு, மூன்று நாட்களில் கைது செய்வோம். சில கேமரா காட்சிகள் கிடைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். தேவைப்பட்டால், விசாரணையில் மேலும் சிலர் கூட கைது செய்யப்படலாம். இதில், அரசியல் தலையீடு இருப்பது என்ற தகவலெல்லாம் உண்மையல்ல. தொடர்ந்து நேர்மையான விசாரணை நடந்து வருகிறது” என சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி சங்கர் தெரிவித்துள்ளார்.