வடகிழக்கு பருவமழை அறிவிப்பு – சென்னை

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல துறைத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.