முதியோா் நலச்சட்டத்தின்படி முதியோா் நல நிதிக்கு மாற்ற முடிவு – தூத்துக்குடி

அஞ்சலகங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடிக்கப்படாமல் இருக்கும் கணக்குகளில் உள்ள தொகையை முதியோா் நலச்சட்டத்தின்படி முதியோா் நல நிதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் www.indiapost.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மற்றும் அனைத்து அஞ்சலகங்களில் அறிவிப்புப் பலகையில் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, சேமிப்புதாரா்கள் தங்கள் கணக்குகளில் உள்ள நீண்ட நாள்களாக திரும்பப் பெறாமல் இருக்கும் தொகையை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அஞ்சலகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் உதயசிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.