இனி எரிவாயுக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை – மாவட்ட வருவாய் ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இனி நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 முப) தற்போது குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வருவாய்) பா.விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையின் படி தூத்துக்குடியில் ரூ.870.50/- ஆகவும், கோவில்பட்டியில் ரூ.869.00/- ஆகவும், கழுகுமலையில் ரூ.877.50/- ஆகவும், கயத்தாரில் ரூ.880.50/- ஆகவும், எட்டையபுரத்தில் ரூ.869.00/- ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.887.50/- எனவும், நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.870.50/- ஆகவும், ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.871.00/- ஆகவும், மற்றும் குளத்தூரில் ரூ.871.00/- எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.870.50/- எனவும், 01.03.2020 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.