தமிழகத்தில் கொரானா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்பில்லை: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

தமிழகத்தில் கொரானா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்பில்லை, இது குறித்து முதல்வர் அறிவிப்பார் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் 25லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து வேளாண் கடன், மகளீர் சிறு வணிக கடன், மத்திய கால கடன் என 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் நலனுக்காக ஆழந்தலையில் 53 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவு அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றார். கூட்டுறவு வங்கிகளில் குடும்ப அட்டையை கொண்டுபோய் கடன் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த படும் என்றார். துத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா சமூக பரவலாக இல்லை, மக்கள் தேவைக்காக மட்டும் வெளியே வரவேண்டும் என்றார். வெளிநாடுகளில் உள்ளவர்கள் இரண்டு முறை கப்பல் மூலம் துத்துக்குடி அழைத்து வரப்பட்டுள்ளனர். வரும் 21 ஆம் தேதி ஈரான் நாட்டிலிருந்து வரும் கப்பலில் மீனவர்கள் அதிகம் பேர் வருகிறார்கள் அவர்கள் அனைவரும் சோதனைக்கு பின் தனிமை படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு வங்கி மூலமாக ஊரடங்கு காலத்தில் 130 பேருக்கு சிறு வணிக கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.