கொரோனா தொற்று இல்லை: மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 42பேர்

மராட்டிய மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 42 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது, எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தி வைத்திருந்த மராட்டிய மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 42 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 42 பேரையும் நேற்று மாலையில் சிறப்பு பஸ் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.