தூக்கு தண்டனை

நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு பிப்.1ஆம் தேதி தூக்கு தண்டனை

டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ மாணவி நிர்பயா தனது நண்பருடன் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது முகேஷ் சிங் உள்ளிட்ட நால்வர் ஆல் மிக கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெற்றதும் பின்னணியில் இந்த நால்வரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 15ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் அவர்களுக்கான தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது. இந்நிலையில் இது தற்போது இந்திய அரசியலில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் முகேஷின் கருணை மனுவை இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்த நிலையில் திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 6 மணி அளவில் இந்த நால்வரையும் தூக்கிலிட பாட்டியாலா நீதிமன்றம் திகார் சிறைக்கு வாரண்ட் பிறப்பித்துள்ளது.

-seithikkural