டெல்லி மாணவி நிர்பயா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் ஜெலில் இன்று அதிகாலை 5:30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, நிர்பயாவின் தாய் ஆஷா தேவி செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கூறுகையில், “தண்டனை நிறைவேற்றப்பட்டதன் மூலம், ஒட்டு மொத்த தேசத்துக்கும் நீதி கிடைத்துள்ளது என்றார். எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது. எனது மகளுக்கு மட்டுமல்ல; நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கும் நீதி கிடைத்து விட்டது. கொடிய செயல்களில் ஈடுபடுவோருக்கு இத்தகைய தண்டனை இனியாவது ஒரு பாடமாக அமையட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.