நிலாச்சோறு நிகழ்ச்சி – தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் ஒவ்வொரு மாதமும் பௌா்ணமி அன்று கடற்கரையோரம் அமைந்துள்ள ரோச் பூங்காவில், நிலாச்சோறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது . அது போல் இந்த மாதம் பௌா்னமியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பல் வேறு கடைகள் அமைக்கப் பட்டிருந்தன .குறிப்பாக மண்பானையில் தயாாிக்கப்படும் இட்லி, உருளைக்கிழங்கை வெட்டி மாவில் போட்டு பின்பு எண்ணெய்யில் பொாித்து எடுத்து விற்பனை செய்தாா்கள் . மற்றும் ஜிகா்தண்டா, லாலா கடை கருப்பட்டி அல்வா , கருப்பட்டி மிட்டாய் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை அருமையாக நடைபெற்றது.